/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டியில் 2278 படகுகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு
/
தொண்டியில் 2278 படகுகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு
தொண்டியில் 2278 படகுகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு
தொண்டியில் 2278 படகுகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு
ADDED : மே 26, 2025 02:08 AM
தொண்டி,: தொண்டியில் இயங்கும் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளை ஆய்வு செய்யும் பணிகள் இரு நாட்கள் நடைபெற உள்ளதாக தொண்டி மீன்வளத்துறை மற்றும் மரைன் போலீசார் தெரிவித்தனர்.
கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடிக்க தடைகாலம் அறிவிக்கபட்டுள்ளது. இதனால் மீனவர்கள் விசைப் படகுகளை கரையில் நிறுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் மீன்பிடி தடைகாலத்தின் போது விசைபடகுகளை ஆய்வு செய்வது வழக்கம்.
எஸ்.பி.பட்டினம் முதல் ஆற்றங்கரை வரை 78 விசைப் படகுகளும், 2200 நாட்டுப்படகுகளும் உள்ளன. இதில் மே 30ல் விசைப்படகுகளும், ஜூன் 3ல் நாட்டுபடகுகளும் ஆய்வு செய்யப்படும். மீன்வளத்துறை விதிமுறைகளின்படி அனைத்து ஆவணங்களையும் காட்டவேண்டும்.
ஆய்வில் காண்பிக்கபடாத, தகுதி இல்லாத விசைபடகுகள், நாட்டுப்படகுகளின் பதிவு, மானிய விலையிலான டீசல் நிறுத்தம் செய்யபடும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.