/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலீசார் மன அழுத்தம் குறைக்கும் குடும்ப விழா நடத்திட கோரிக்கை
/
போலீசார் மன அழுத்தம் குறைக்கும் குடும்ப விழா நடத்திட கோரிக்கை
போலீசார் மன அழுத்தம் குறைக்கும் குடும்ப விழா நடத்திட கோரிக்கை
போலீசார் மன அழுத்தம் குறைக்கும் குடும்ப விழா நடத்திட கோரிக்கை
ADDED : மே 26, 2025 02:09 AM
திருவாடானை: போலீசார் மன அழுத்தம் குறைத்து புத்துணர்வு பெறுவதற்கு குடும்பத்துடன் இணைந்து கொண்டாடும் வகையில் குடும்ப விழா நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
திருவாடானை சப்-டிவிசனில் திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, எஸ்.பி.பட்டினம் போன்ற போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் போலீசார் தங்கள் பணியின் போது பல்வேறு சவால்களையும், மன அழுத்தங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், அவர்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடமுடியாமல் தவிக்கின்றனர்.
குடும்ப விழா நடத்துவதன் மூலம் அவர்களது மன அழுத்தம் குறைந்து, அவர்களின் பணி மேலும் சிறப்பாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவாடானையில் போலீசார் குடும்ப விழா நடந்தது. அப்போது பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
போலீசாரின் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டு நல்லுறவை வளர்த்துக் கொண்டனர்.
அதன்பிறகு குடும்ப விழா நடைபெறவில்லை.போலீசாரின் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும், அவர்களது மனநிலை மேம்பாட்டிற்கும் குடும்ப விழா நடத்திட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.