/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா நாளை முதல் போலீசார் பாதுகாப்பு
/
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா நாளை முதல் போலீசார் பாதுகாப்பு
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா நாளை முதல் போலீசார் பாதுகாப்பு
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா நாளை முதல் போலீசார் பாதுகாப்பு
ADDED : அக் 26, 2025 05:07 AM
கமுதி: கமுதி அருகே பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அக்.,27ல் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று எஸ்.பி.,சந்தீஷ் கூறினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி, 63ம் ஆண்டு குருபூஜை விழா அக்.,28, 29, 30 தேதிகளில் நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் மரியாதை செலுத்த உள்ளனர். பசும்பொன்னில் முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
முதுகுளத்துார், கமுதி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள், கண்காணிப்பு பகுதிகளில் எஸ்.பி.,சந்தீஷ் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை, ஜெயந்தி விழா விழாவிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் வருவார்கள். இதையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் ஒரு மாதத்திற்கு முன்பு துவங்கியது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அக்.,27ல் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் 38 இடங்களில் வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களை ஆய்வு செய்த பிறகே அனுப்பப்படும்.
வாடகை வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. கண்காணிப்பதற்காக 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் வகையில் கேமரா வகைகள் அமைக்கப்பட உள்ளது. போலீசார் டூவீலர், வானங்களில் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
கிராம மக்கள் வந்து செல்லும் வகையில் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

