/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராமங்கள் தோறும் சிசிடிவி., கேமராக்கள் பொருத்துவதில் ஆர்வம் காட்டும் போலீசார் பொதுமக்கள் வரவேற்பு
/
கிராமங்கள் தோறும் சிசிடிவி., கேமராக்கள் பொருத்துவதில் ஆர்வம் காட்டும் போலீசார் பொதுமக்கள் வரவேற்பு
கிராமங்கள் தோறும் சிசிடிவி., கேமராக்கள் பொருத்துவதில் ஆர்வம் காட்டும் போலீசார் பொதுமக்கள் வரவேற்பு
கிராமங்கள் தோறும் சிசிடிவி., கேமராக்கள் பொருத்துவதில் ஆர்வம் காட்டும் போலீசார் பொதுமக்கள் வரவேற்பு
ADDED : ஆக 12, 2025 11:17 PM
சாயல்குடி:கிராமங்கள் தோறும் போலீசாரின் அதிக கண்காணிப்பு உள்ள கிராமங்களில் சிசிடிவி., கேமராக்கள் பொருத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கீழக்கரை போலீஸ் டி.எஸ்.பி.,எல்லைக்கு உட்பட்ட திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முக்கிய இடங்களில் சிசிடிவி., கண்காணிப்பு கேமராக்களை அமைக்கப் பட்டுள்ளன.
இதன் மூலமாக நகரில் நடக்கக்கூடிய குற்றச்சம்பவங்கள், விபத்துகள், போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு வரப் பிரசாதமாக கண்காணிப்பு கேமரா திகழ்வதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் கூறியதாவது:
எஸ்.பி., சந்தீஷ் மற்றும் ஏ.எஸ்.பி., அறிவுறுத்தலின்படி மன்னார் வளைகுடா கடற்கரை கிராமங்கள் மற்றும் கிராமங்களின் முக்கிய சந்திப்பு தெருக்கள், நகர் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் சம்பந்தப்பட்ட கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் பல இடங்களில் நிறுவப்பட்டு வருகின்றன.
கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத இடங் களிலும் அவற்றை பொருத்துவதால் நிகழக்கூடிய நன்மை களையும், குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கான மாற்று காரணியாகவும் விளங்குவது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டு பொருத்தப்படுகின்றன.
பெரும்பாலான கிராமங்களில் தன்னார்வமாக கேமராக்கள் பொருத்தப்பட்டு அதற்கான அறிக்கையை போலீஸ் ஸ்டேஷன்களில் தருகின்றனர்.
இவ்விஷயத்தில் பொதுமக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. இதன் மூலமாக கடந்த இரண்டு மாதங்களில் பத்திற்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்களை அடையாளம் கண்டு உடனடியாக தீர்வும் காணப்பட்டுள்ளது.
இதன் மூலம் படிப்படியாக இதர கிராமங்களுக்கும் கேமராக்கள் பொருத்துவதற்கு வலியுறுத்தி வருகிறோம் என்றனர்.

