/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெண் தவறவிட்ட நகை மீட்பு போலீசார் துரித நடவடிக்கை
/
பெண் தவறவிட்ட நகை மீட்பு போலீசார் துரித நடவடிக்கை
ADDED : ஜன 27, 2025 06:29 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் ஒரு பவுன் நகையுடன் கைப்பபையை தவறவிட்ட பெண்ணுக்கு நகை, பணத்தை போலீசார் உடனடியாக மீட்டுக்கொடுத்தனர்.
ராமநாதபுரம் சூரங்கோட்டை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராமையா, இவரது மனைவி முருகேஸ்வரி 50. இவர் நேற்று முன் தினம் கைப்பையுடன் கீழக்கரை ரோட்டில் உள்ள தர்ம மூனீஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார்.
அப்போது கையில் வைத்திருந்த பையை காணவில்லை. அதில் ஒரு பவுன் நகை, அலைபேசி, 200 ரூபாய் பணமும் இருந்தது. இது குறித்து பி.1 போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரனிடம் புகார் தெரிவித்தார். அலைபேசி சிக்னலை வைத்து உடனடியாக தொலைந்து போன பையை நகை, அலைபேசி, 200 ரூபாய் உட்பட அனைத்தும் மீட்டு முருகேஸ்வரியிடம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஒப்படைத்தார்.

