/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெண் தவறவிட்ட பணத்தை மீட்டுத்தந்த போலீஸ்காரர்
/
பெண் தவறவிட்ட பணத்தை மீட்டுத்தந்த போலீஸ்காரர்
ADDED : ஜூலை 17, 2025 11:14 PM
பரமக்குடி: பரமக்குடி அருகே மேலாய்க்குடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண் ஒருவர் தவறவிட்ட பணத்தை போலீஸ்காரர் மீட்டுக் கொடுத்து பொது மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.
எமனேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட மேலாய்க்குடி கிராமத்தில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட பொதுமக்கள் பங்கேற்றனர்.
அப்போது எஸ்.அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராதிகாவின் பர்ஸ் காணாமல் போனது. அப்பகுதியில் பணியில் இருந்த போலீஸ்காரர் மலைச்சாமி பணப்பையை கண்டெடுத்தார்.
அதிலிருந்து 58 ஆயிரத்து 900 ரூபாய் ராதிகாவிடம், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ரவிச்சந்திரன், முத்தழகு மற்றும் தலைமை பெண் போலீஸ் கற்பக சுந்தரி, வருவாய்த்துறை கார்த்திக் உள்ளிட்டோர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. பணத்தை மீட்டுக் கொடுத்த காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

