/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில கால்பந்துப் போட்டியில் பாலிடெக்னிக் கல்லுாரி சாதனை
/
மாநில கால்பந்துப் போட்டியில் பாலிடெக்னிக் கல்லுாரி சாதனை
மாநில கால்பந்துப் போட்டியில் பாலிடெக்னிக் கல்லுாரி சாதனை
மாநில கால்பந்துப் போட்டியில் பாலிடெக்னிக் கல்லுாரி சாதனை
ADDED : பிப் 17, 2025 07:03 AM
கீழக்கரை : விருதுநகரில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி மூன்றாம் இடம் பிடித்து சாதித்துள்ளது.-
கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் மதுரை மண்டல அளவிலான கால்பந்து போட்டிகள் சமீபத்தில் நடந்தது.
இதில் முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடத்தை பிடித்து, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றது.
விருதுநகர் வி.எஸ்.வி.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் மாநில அளவிலான கால்பந்துபோட்டி பிப்.14ல் நடந்தது.
அதில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாம் இடம் பிடித்தது.
சாதித்துள்ள வீரர்களை முகமது சதக் அறக்கட்டளை இயக்குநர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, முதல்வர் சேக் தாவூது, துணை முதல்வர் கணேஷ்குமார், கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.