/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் பாலிதீன் பை பயன்பாடு... அதிகரிப்பு; பெயரளவில் தடையால் தாராள விற்பனை
/
ராமநாதபுரத்தில் பாலிதீன் பை பயன்பாடு... அதிகரிப்பு; பெயரளவில் தடையால் தாராள விற்பனை
ராமநாதபுரத்தில் பாலிதீன் பை பயன்பாடு... அதிகரிப்பு; பெயரளவில் தடையால் தாராள விற்பனை
ராமநாதபுரத்தில் பாலிதீன் பை பயன்பாடு... அதிகரிப்பு; பெயரளவில் தடையால் தாராள விற்பனை
ADDED : ஜன 22, 2025 07:39 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகள், கப், கவர்கள் தாராளமாக புழக்கத்தில் உள்ளன. மண்வளத்திற்கு கேடு விளைவிக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள், கப், கவர்கள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
சிறு ஓட்டல்கள், கடைகள், மார்க்கெட், பஜார், இறைச்சி கடை ஆகிய இடங்களில் பாலிதீன் தாராளமாக பயன்படுத்துகின்றனர்.
இவ்விஷயத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகளின் நடவடிக்கை பெயரளவில் மட்டுமே உள்ளது.
குப்பை கொட்டும் இடங்கள், தொட்டிகளில் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கிறது. சில ஊராட்சிகளில் குப்பையை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் நீர்நிலைகள், ஓடை வாய்க்கால்களில் பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளது. அவற்றை அகற்ற வேண்டும். மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஓட்டல்களில் வாழை இலைக்கு பதில் இன்னமும் பிளாஸ்டிக் இலை, பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி பார்சல் கட்டுவது தொடர்கிறது.
அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் எங்கும் தங்கு தடையின்றி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை தடுக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.