ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கல்லுாரி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடினர். பசுமை ராமேஸ்வரம் அமைப்புடன் இணைந்து மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர். மாவட்ட சுற்றுலாத்துறை முதன்மை அதிகாரி நித்திய கல்யாணி உட்பட பலர் பங்கேற்றனர்.
*ராமேஸ்வரம் அருகே பாம்பனில் உள்ள அன்னை ஸ்கொலாஸ்டிகா பெண்கள் கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாடினர். மாணவிகளுக்கு கயிறு இழுத்தல், உறியடி போட்டிகளும், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியும் நடந்தது. வென்றவர்களுக்கு கல்லுாரி செயலாளர் ரூபி பரிசு வழங்கினார். அருட்சகோதரி எமல்டா ராணி பங்கேற்றனர்.
*கடலாடி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நீதிபதி சங்கீதா தலைமை வகித்தார். அரசு வழக்கறிஞர் முனியாண்டி முன்னிலை வகித்தார். கடலாடி வழக்கறிஞர் சங்க தலைவர் (பொறுப்பு) நாகநாத துரை, செயலாளர் பூமுருகன், பொருளாளர் பாண்டியன், சக்திவேல், ராம்கி பங்கேற்றனர்.
*திருவாடானை அருகே ஓரியூர் ஊராட்சி புதுவயல் கிராமத்தில் முத்தமிழ் மக்கள் நலச் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. ஆண்கள், பெண்கள் கலந்து கொண்ட பானை உடைத்தல் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கோலப்போட்டி
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி சார்பில் பொங்கல் விழா செயல் அலுவலர் மாலதி தலைமையில் கொண்டாடப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கில் புகையில்லா பொங்கல் என்ற விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது. பங்கேற்ற மாணவிகளுக்கு செயல் அலுவலர் மாலதி பரிசுகள் வழங்கினார். வீட்டின் சுற்றுப்புறங்கள் மற்றும் தெருக்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.