
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி ?: -பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
தாலுகாவில் 153 கடைகள் உள்ளன. இங்குஉள்ள 76,299 கார்டுதாரர்களுக்கு அரிசி, சீனி, கரும்பு மற்றும் ரூ.1000 பணம் வழங்கப்பட உள்ளது.
பரமக்குடி ரேஷன் கடைகளில் எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி துவக்கி வைத்தனர். அனைத்து கடைகளிலும் டோக்கன்கள் வழங்கப்பட்டு மக்கள் சிரமம் இன்றி பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.