/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முத்துப்பேட்டை புனித ஜோசப் பள்ளியில் பொங்கல் விழா
/
முத்துப்பேட்டை புனித ஜோசப் பள்ளியில் பொங்கல் விழா
ADDED : ஜன 20, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம்: முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் கசிமீர் சகாயநாதன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம் முன்னிலை வகித்தார். 6 முதல் பிளஸ் 2 மாணவர்கள் தனித்தனி குழுவாக சேர்ந்து பொங்கலிட்டனர்.
கோலப்போட்டி, கயறு இழுத்தல், உறியடித்தல், கபடி, பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கி பாராட்டப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.