/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
/
பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
ADDED : ஜன 11, 2025 06:46 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலங்கள், பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வளாகத்தில் வருவாய்துறை சார்பில் விழா நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள், தாசில்தார்கள், கலெக்டர் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் எஸ்.பி.,அலுவலகத்தில் எஸ்.பி.,சந்தீஷ் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மதுக்குமார் மற்றும் அலுவலர்கள், போட்டி தேர்வு பயிற்சி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லுாரி, வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி, ராமநாதபுரம் ஹிந்து வித்யாலயா தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் சாந்தி, கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் பிரித்தி கரோலின், பள்ளி மேலாண்மை குழுதலைவர் சரண்யா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம் நடந்தது. பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
*திருவாடானை அரசு தொடக்கபள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கதிரவன் மற்றும் பெற்றோர்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தொண்டி அருகே நம்புதாளை அரசு தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் புல்லாணி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் பாண்டிசெல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். பொங்கல் வைத்து கொண்டாடபட்டது. ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ஜான்தாமஸ் செய்திருந்தார்.
* ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் தலைமை ஆசிரியர் சுயம்புலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் சசிகுமார், முதுகலை ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டு வழிபாடு செய்யப்பட்டது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பகவதி குமார் தலைமையில் பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராணி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாத்திமா கனி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சந்தனவேல் தலைமை வகித்தார்.பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமர் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு கோலப் போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பொங்கல் வைத்து வழிபட்டனர்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஜோசப் விக்டோரியா ராணி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மாணவர்களுக்குதனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடந்தது.மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.
முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
* பரமக்குடி ஆயிர வைசிய பி.எட்., கல்லுாரியில் தலைவர் போஸ் தலைமை வகித்தார். இணைத்தலைவர் பாலுச்சாமி, செயலாளர் வரதராஜன், இணைச்செயலாளர்கள் இளையராஜா, சுதர்சன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
முதல்வர் அல்போன்சா வரவேற்றார். உறியடித்தல், கோலப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
*பரமக்குடி நகராட்சியில் தலைவர் சேது கருணாநிதி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. துணைத் தலைவர் குணா, கமிஷனர் முத்துச்சாமி முன்னிலை வகித்தனர்.