ADDED : ஜன 14, 2025 08:07 PM
திருவாடானை:
திருவாடானை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பொங்கல் விழா நடந்தது. டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமை வகித்தார். திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடியில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் மற்றும் டி.எஸ்.பி., அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டு பொங்கல் விழா கொண்டாடினர். பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
l கீழக்கரை அன்புநகரில் பொங்கல் விழா நடந்தது. விரிவுரையாளர் எபன் விழாவை ஒருங்கிணைத்தார். சிறப்பு விருந்தினராக கீழக்கரை சேர்ந்த துபாய் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் தலைமை வகித்தார்.
நகராட்சி துணைத் தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். இந்தியன் ரெட் கிராஸ் நிர்வாகி சுந்தரம், கவுன்சிலர் பயாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்பு, கரும்பு வழங்கப்பட்டது.