/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
/
ராமநாதபுரத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 12, 2025 04:55 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது.
கல்லுாரி தாளாளர் சின்னதுரை அப்துல்லா தலைமை வகித்தார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். டாக்டர் பாத்திமா, டாக்டர் ராசிகா, டாக்டர் அட்டிப் அப்துல்லா, டாக்டர் ஆயிஷத்துல் நிஷா ஆகியோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை கலை இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் கவிதா, மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்தனர்.
* செய்யது அம்மாள் செவிலியர் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா தலைமை வகித்தார். முதல்வர் ஆர்த்தி வரவேற்றார். டாக்டர் பாத்திமா, டாக்டர் ராசிகா, டாக்டர் அட்டிப் அப்துல்லா, டாக்டர் ஆயிஷத்துல் நிஷா ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி துணை முதல்வர் ஜூலிநேசமணி, மாணவர்கள், ஆசிரியர்கள் செய்தனர்.
* வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல்மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் வேலுமனோகரன் தலைமை வகித்தார். கரகாட்டம், சிலம்பம், புலியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. கல்லுாரி செயலாளர் சகுந்தலா பார்த்தசாரதி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லுாரியில் நடந்த பொங்கல் விழாவிற்கு மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்த்துறை கம்பன் கழகம் சார்பில் இன்றைய இளைஞர்கள் நமது பாரம்பரியத்தை போற்றி வளர்க்கிறார்களா, சிதைக்கிறார்களா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது.
* பனைக்குளத்தில்ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. தலைமை யாசிரியர் முத்துமாரி, பள்ளி மேலாண்மை குழுவினர். இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்கள், இரு ஜமாத்தார்கள், ஆசிரியர்கள் ஹாஜாமைதீன், மணிகண்டன் மாணவர்கள் பங்கேற்றனர்.
* கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் பாலமுருகன் விழாவினை ஒருங்கிணைத்தார். உறியடித்தல், சிலம்பம், கும்மி, ஒயிலாட்டம், நடனம்ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
* கீழக்கரை முகமதுசதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது. முதல்வர் நிர்மல் கண்ணன் தலைமை வகித்தார். துணை முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். டீன் அகாடமிக்ஸ் பேராசிரியர் திராவிட செல்வி பங்கேற்றனர்.
* முதுகுளத்துார் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. தாளாளர் காந்திராஜன் தலைமை வகித்தார். பட்டிமன்ற பேச்சாளர் துரைபாண்டியன் முன்னிலை வகித்தார். விளையாட்டு போட்டிகள், பட்டிமன்றம் நடந்தது.
முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பொங்கல் விழா நடந்தது. வட்டார டாக்டர் திவான் முகைதீன் தலைமை வகித்தார். டாக்டர் பவித்ரவர்ஷினி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.
கமுதி அருகே பேரையூரில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது.