/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் வெறிச்சோடிய கடற்கரை பகுதி
/
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் வெறிச்சோடிய கடற்கரை பகுதி
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் வெறிச்சோடிய கடற்கரை பகுதி
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் வெறிச்சோடிய கடற்கரை பகுதி
ADDED : ஜன 14, 2025 05:03 AM

ராமேஸ்வரம்: பொங்கல் பண்டிகை யொட்டி நேற்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தியுள்ளனனர். மீனவர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.
இன்று (ஜன.,14) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நேற்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் 750 விசைப்படகுகளையும் கரையில் நிறுத்தினர்.
இதனால் ராமேஸ்வரம் கடலோரத்தில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்கள், லேத், பட்டறைகள் மூடப்பட்டு மீனவர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. நேற்று மீனவர்கள் பலர் படகில் கரும்பு கட்டினர்.
பொங்கல் பண்டிகை முடிந்து ஜன., 15ல் மீன்பிடிக்க செல்ல உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.