ADDED : அக் 09, 2024 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே நத்தம் அண்ணா நகரில் அமைந்துள்ள அழகுமீனாள் அம்மன் கோயில் புரட்டாசி மாதம் பொங்கல் விழா நடந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.
விழாவை முன்னிட்டு விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் கரகம், அக்கினிச்சட்டி, பால்குடங்கள் எடுத்து கிராமத்தின் முக்கிய விதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்பு அம்மனுக்கு பால், சந்தனம், குங்குமம், மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.