/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
39,842 கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு
/
39,842 கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு
ADDED : ஜன 03, 2026 06:31 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் 39,842 ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அத்துடன் இலவச வேட்டி சேலையும் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரும்பு, பச்சரிசி அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. ஜன.,15ல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரேஷன் கடை வாயிலாக பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான பணிகள் துவங்கி யுள்ளது.
அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. திருவாடானை தாலுகாவில் 85 ரேஷன் கடைகள் உள்ளன. 39,842 ரேஷன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகளாக உள்ளனர்.
இது குறித்து தாசில்தார் ஆண்டி கூறியதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர் களுக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். அந்தந்த ரேஷன் கடை களுக்கும் பொங்கல் தொகுப்பாக அரசி, சர்க்கரை ஒதுக்கீடு செய்யப் பட்டு கடைகளுக்கு அனுப்பும் பணிகள் நடக்கிறது. இலவச வேட்டி, சேலையும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

