/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் பொங்கல் மஞ்சள் கொத்து அறுவடை : சுருங்கி வரும் விவசாயம்

ADDED : ஜன 13, 2025 06:29 AM

பரமக்குடி, : பரமக்குடியில் பொங்கல் பானையில் கட்டுவதற்கு விளைவிக்கப்படும் மஞ்சள் கொத்து அறுவடை துவங்கியது.
பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட மஞ்சள்பட்டணம், நயினார்கோவில் ஒன்றியம் மஞ்சக்கொள்ளை ஆகிய பகுதிகளில் பொங்கல் பானையில் கட்டுவதற்காக மட்டுமே மஞ்சள் செடிகள் விளைவிக்கப்படுகிறது.
தை பொங்கலின் போது புது பானையில் இதனை கட்டி பொங்கல் வைப்பது வழக்கம். மஞ்சள் செடிகள் நல்ல தண்ணீரில் மட்டுமே வளரும். மேலும் ஏக்கர் கணக்கில் விதைக்க முடியாது என்பதால் ஒரு சென்ட்க்கு 10 கிலோ விதம் விதைக்கின்றனர்.
தொடர்ந்து மஞ்சள்பட்டணம் பகுதியில் 20 ஏக்கர் வரை விளைவிக்கப்பட்ட மஞ்சள் செடிகள், தற்போது 2 ஏக்கருக்கும் குறைவாகவே விளைநிலங்கள் இருக்கிறது. வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் விவசாயம் வெகுவாக சுருங்கிவிட்டது. நாளை பொங்கல் கொண்டாடப்படும் நிலையில் மஞ்சள் கொத்து செடிகள் அறுவடை செய்யப்பட்டது. கொத்து செடிகள் 20 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.