/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமாயணம் இதிகாசத்துடன் தொடர்புடைய சிற்பங்கள் நிறைந்த பூவேந்தியநாதர் கோயில் குதிரையால் வெளி வந்த சிவன்
/
ராமாயணம் இதிகாசத்துடன் தொடர்புடைய சிற்பங்கள் நிறைந்த பூவேந்தியநாதர் கோயில் குதிரையால் வெளி வந்த சிவன்
ராமாயணம் இதிகாசத்துடன் தொடர்புடைய சிற்பங்கள் நிறைந்த பூவேந்தியநாதர் கோயில் குதிரையால் வெளி வந்த சிவன்
ராமாயணம் இதிகாசத்துடன் தொடர்புடைய சிற்பங்கள் நிறைந்த பூவேந்தியநாதர் கோயில் குதிரையால் வெளி வந்த சிவன்
ADDED : டிச 03, 2025 06:35 AM

சாயல்குடி: ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய சிற்பங்கள் நிறைந்த கோயிலாக ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் திகழ்கிறது.
ராமநாதபுரத்தில் இருந்து 65 கி.மீ.,ல் உள்ள சாயல்குடியில் இருந்து 15 கி.மீ.,ல் மாரியூர் பூவேந்தியநாதர் பவள நிறவல்லியம்மன் கோயில் உள்ளது. பல நுாற்றாண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் குதிரையில் வரும் போது குதிரையின் காலில் புதைந்திருந்த கோபுர கலசத்தில் தட்டியதில் குதிரை கீழே விழுந்தது.
இதையடுத்து கோபுர கலசம் தட்டிய இடத்தில் மணலை தோண்டிய போது அழகிய வடிவமைப்பில் இருந்த பூவேந்திய நாதர், பவளநிறவல்லியம்மன் விக்ரகங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனை அறிந்த சேதுபதி மன்னர்கள் மிகப்பெரிய அளவில் மணலை அகற்றிய போது புதையுண்ட நிலையில் கோயில் கண்டெடுக்கப்பட்டது.
வருண பகவானால் பூஜிக்கப்பட்ட சிவன் ஸ்தலமாக விளங்குகிறது. கோயிலுக்கு வெளியே பூமிக்குள் தெப்பக்குளம் மற்றும் இன்னும் பல கோயில்கள் பொக்கிஷங்களாக புதைந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்பு கின்றனர்.
சுறா மீனுக்கு சாப விமோசனம் ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட இக்கோயிலின் பேஸ்கார் சீனிவாசன் கூறியதாவது: இங்கு சித்ரா பவுர்ணமி திருக்கல்யாணம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாரியூர் கடலுக்குள் சென்று சிவபெருமான் மீனவர் வேடம் தரித்து தொல்லை தந்த சுறா மீனை அடக்கி சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது.
ராமபிரான் மாரீசனை வதம் செய்த இடம் என்பதால் மாரியூர் என்றும் பெயர் பெறுகிறது. அம்மன் சன்னதியின் கூரை முகப்பு பகுதியில் ராமாயணத்தில் உள்ள சகோதரர்களான வாலியும், சுக்ரீவனும் ஆயுதங்களுடன் சண்டையிடும் சிற்பம் கலைநயமிக்கதாக மூன் றடி அகல நீளத்தில் வட்ட வடிவத்தில் புடைப்புச் சிற்பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ராவண மண்டபம் 30 அடி நீளம் மற்றும் 10 அடி அகல மண்டபத்தில் கடற்பாறை துாண்கள் மற்றும் கடப்பாறையால் வேயப்பட்ட கூரை பழங்கால பெருமையை நினைவூட்டுகின்றன. ராவண மண்டபத்தில் உள்ள சிறிய ஜன்னல் வழியாக 100 மீ., தொலைவில் உள்ள பவள நிற வல்லியம்மனின் சன்னதியை தரிசிக்கும் வகையில் வேலைப்பாட்டுடன் கோயிலுக்கு முன்பாக மண்டபம் அமைக்கப் பட்டுள்ளது.
இங்குள்ள பூவேந்திய நாதர் சன்னதியில் மான் சிற்பம், இலங்கை மன்னன் ராவணேஸ்வரனின் தாய் மாமன் மாரீசனை குறிப்பது போன்று உள்ளது. துர்மந்த மகரிஷி சிவபூஜை செய்வது சிற்பமாக அங்குள்ள துாண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வருண பகவான் சிவலிங்கத்திற்கு திருக்குடத்தில் அபிஷேகம் செய்வதும் உள்ளது.
இலங்கைக்கு பாலம் அமைப்பதற்காக கடற்பாறையை துாக்கிய நிலையில் வானரத்தின் சிற்பமும் உள்ளது. பழமையான முன்னை மரத்தை தொட்டு வணங்கி பக்தர்கள் செல்கின்றனர். கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கோயிலில் உள்ள ராமாயண புராண இதிகாச சிற்பங்களை கண்டு அவற்றின் மகத்துவம் குறித்து கேட்டு தெரிந்து செல்கின்றனர் என்றார்.

