/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அஞ்சலக ஏ.டி.எம்., மூடல்; தவிக்கும் மக்கள்
/
அஞ்சலக ஏ.டி.எம்., மூடல்; தவிக்கும் மக்கள்
ADDED : ஏப் 18, 2025 11:32 PM

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் தலைமை அஞ்சலகம் அருகே இண்டியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஏ.டி.எம்., மையம் பூட்டப்பட்டுள்ளதால் அலுவலகத்தில் பணபரிவர்த்தனைக்காக மக்கள் நீண்டநேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர். 15 நாட்களுக்கும் மேலாக ஏ.டி.எம்., செயல் படவில்லை.
இதனால் அஞ்சலக பணியாளர் மூலம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் பொதுமக்கள் பணபரிவர்த்தனை செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இங்கும் சர்வர் சரிவர கிடைக்காமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிரமப்படுகின்றனர். எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். தபால் துறை ஏ.டி.எம்., மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர அஞ்சல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

