/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்வி உதவித்தொகை பெற அஞ்சல் துறை அழைப்பு
/
கல்வி உதவித்தொகை பெற அஞ்சல் துறை அழைப்பு
ADDED : ஆக 23, 2025 04:44 AM
ராமநாதபுரம்: இந்திய அஞ்சல் துறையில் தபால் தலை சேகரிப்பு வினாடி-வினா போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.6000 வழங்கப்படுகிறது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க 6 முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கும் 'தீன் தயாள் ஸ்பார்ஷ்' திட்டம் செயல்படுகிறது.
மண்டல அளவிலான தபால் தலை சேகரிப்பு பற்றி வினாடி - வினா தேர்வு செப்., 20ல் நடக்க உள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் பெயரில் அஞ்சல் தலை சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.
பள்ளியில் இயங்கும் தபால் தலை சேகரிப்பு மன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். இத்தேர்வில் நடப்பு நிகழ்வு, வரலாறு, அறிவியல், விளையாட்டு, கலா சாரம், புவியியல், ஆளுமை, தபால் தலை சேகரிப்பு தொடர்பான 50 வினாக்கள் கேட்கப்படும்.
www.tamilnadupost.cept.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அஞ்சல் துறை தலைவர், தென்மண்டலம், மதுரை- 625 002. என்ற முகவரிக்கு செப்.,1க்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் அஞ்சல் உறையின் மீது 'தீன் தயாள் ஸ்பார்ஷ்' என கட்டாயம் குறிப்பிட வேண்டும் என ராமநாதபுரம் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.