/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அஞ்சலக ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
அஞ்சலக ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 20, 2025 07:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: அஞ்சலக ஓய்வூதியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் தலைமை அஞ்சலம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அஞ்சல் ஓய்வூதியர் சங்க உதவி செயலாளர் நல்லதம்பி தலைமை வகித்தார். நிர்வாகி முகமது இஸ்சாதீன் முன்னிலை வகித்தார். உதவி தலைவர் ராமு, உதவி செயலாளர்கள் ராஜூ, ரங்கசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
எட்டாவது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். முடக்கப்பட்ட பஞ்சப்படியை வழங்க வேண்டும். மெடிக்கல் அலவன்ஸ் ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.