/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அஞ்சல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
அஞ்சல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 11, 2025 04:04 AM

ராமநாதபுரம்: மாவட்ட அனைத்து அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் ஊழியர்கள் தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்து ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் கோட்டத்தலைவர் காரிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் சேகர், பொருளாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். இதில் தொழிற்சங்க காரணத்திற்காக அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் மகாதேவ்வய்யாவை இலாக்காவில் இருந்து பணிநீக்கம் செய்துள்ளனர். இதை அனைத்து அஞ்சல் ஊழியர்களும் கண்டிக்கிறோம்
தொழிற்சங்க விரோத போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
முன்னாள் செயலாளர் பாலு, கோட்டச் செயலாளர் பாண்டித்துரை, முதன்மை ஆலோசகர் ஜான்பிரிட்டோ, நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.