ADDED : ஜூலை 22, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன் பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
கோட்டத்தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். 8வது ஊதியக்குழு அமல்படுத்தலில் தாமதம் காரணமாக 50 சதவீதம் பஞ்சப்படி நிவாரணத்தை அடிப்படை ஊதியத்தில் இணைக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கோட்ட செயலாளர்கள் லட்சுமி நாராயணன், ராஜேந்திரன், தங்கராஜ் பங்கேற்றனர்.