/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு அலுவலக சுவர்களை ஆக்கிரமிக்கும் போஸ்டர்கள்
/
அரசு அலுவலக சுவர்களை ஆக்கிரமிக்கும் போஸ்டர்கள்
ADDED : ஜன 18, 2025 06:58 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அரசு அலுவலக சுவர்களில் போஸ்டர் ஓட்டுவது அதிகரித்துள்ளதால் அவற்றை அகற்ற வேண்டும்.
பொதுவாக பிளக்ஸ் பேனர் வைக்க, போஸ்டர்கள் ஒட்டுவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் அதனை பின்பற்றாமல் அனுமதியின்றி ரோட்டோரத்திலும், நடுவில் உள்ள சென்டர் மீடியன்களிலும் போஸ்டர்களை கண்டபடி ஓட்டுகின்றனர்.
மேலும் கலெக்டர் அலுவலக வளாகம், ஊராட்சிஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் அருகே பஸ் நிறுத்தங்கள், நிழற்குடைகளில் போஸ்டர்கள் ஒட்டுகின்றனர்.
இதனால் சுவற்றில் உள்ள பெயின்ட், சுண்ணாம்பு வர்ணம் மறைந்து சுவற்றின் உறுதித் தன்மையும் பாதிக்கப்படுகிறது.
எனவே அரசு அலுவலக சுவர்களில் கண்டபடி போஸ்டர் ஒட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.