/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் வைகை கரையோரம் மாதக்கணக்கில் மூடப்படாத பள்ளங்கள்
/
பரமக்குடியில் வைகை கரையோரம் மாதக்கணக்கில் மூடப்படாத பள்ளங்கள்
பரமக்குடியில் வைகை கரையோரம் மாதக்கணக்கில் மூடப்படாத பள்ளங்கள்
பரமக்குடியில் வைகை கரையோரம் மாதக்கணக்கில் மூடப்படாத பள்ளங்கள்
ADDED : ஜூலை 28, 2025 05:32 AM

பரமக்குடி,: பரமக்குடி நகராட்சி வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் கரையோரங்களில் கட்டுமான பணிகள் மந்தமாக நடப்பதால் ஆபத்தான நிலை உள்ளது.
பரமக்குடி நகராட்சி பகுதி கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் துாய்மை இந்தியா திட்டம் 2.0 செயல் படுத்தப்படுகிறது. இதற்காக வைகை ஆற்றில் கழிவுகள் கலக்காத வகையில் குழாய் பதிக்கப்பட்டு ஆற்றங்கரை ஓரங்களில் தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.
இப்பணிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இதன்படி எமனேஸ்வரம் ஆற்றங்கரையோரம் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் அமைக்க கம்பிகள் ஊன்றப்பட்டுள்ளது.
இப்பகுதியில் கான்கிரீட் பணிகள் நடைபெறாமல் காலை, இரவில் வைகை ஆற்றங்கரையோரம் செல்லும் மக்கள் விபத்து அச்சத்துடன் பயணிக்கின்றனர். மேலும் விபத்து ஏற்படும் சூழலில் கான்கிரீட் கம்பிகளால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகவே பணிகளை விரைந்து முடிப்பதுடன், அப்பகுதியில் எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் தடுப்பு கம்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

