/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆனந்துார் பகுதியில் தொடரும் மின்தடை
/
ஆனந்துார் பகுதியில் தொடரும் மின்தடை
ADDED : ஏப் 22, 2025 05:50 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மேலும் பல்வேறு கிராமங்களுக்கு மையப்பகுதியாக உள்ளதால் ஏராளமான வர்த்தக நிறுவனங்களும் அமைந்துள்ளன.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அப்பகுதியில் அடிக்கடி அறிவிக்கப்படாமல் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஆனந்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிலவும் அறிவிக்கப்படாத மின்தடையை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.