/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி சின்னக்கடை பஜாரில் பல மணி நேரம் மின்சாரம் தடை
/
பரமக்குடி சின்னக்கடை பஜாரில் பல மணி நேரம் மின்சாரம் தடை
பரமக்குடி சின்னக்கடை பஜாரில் பல மணி நேரம் மின்சாரம் தடை
பரமக்குடி சின்னக்கடை பஜாரில் பல மணி நேரம் மின்சாரம் தடை
ADDED : அக் 11, 2025 04:02 AM
வியாபாரிகள் அவதி
பரமக்குடி: பரமக்குடி சின்ன கடை பஜாரில் நாள் முழுவதும் அவ்வப்போது பல மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பரமக்குடி காட்டுப்பரமக்குடியில் உப மின் நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து பல டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது தீபாவளி விற்பனை அதிகரித்துள்ள நிலையில் மின்தடை சில பகுதிகளில் சர்வ சாதாரணமாக உள்ளது. தரைப்பாலம் பகுதி டிரான்ஸ்பார்மரில் இருந்து சப்ளை ஆகும் சின்ன கடை பஜார், எஸ்.எஸ். கோயில் தெரு உள்ளிட்ட பகுதியில் மின்தடை அதிகளவில் இருக்கிறது.
நேற்று காலை முதல் மாலை வரை ஐந்துக்கு மேற்பட்ட முறை பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. அப்பகுதியில் ஜவுளி கடைகள், தனியார் மருத்துவமனைகள் அதிகளவில் உள்ளதால் மின்தடையால் வியாபாரம் பாதிப்பதுடன், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் சிரமப்பட்டனர். நெசவாளர்கள் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
எனவே மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க மின்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.