/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாரச்சந்தை நாட்களில் மின்தடை வணிகர்களின் வியாபாரம் பாதிப்பு
/
வாரச்சந்தை நாட்களில் மின்தடை வணிகர்களின் வியாபாரம் பாதிப்பு
வாரச்சந்தை நாட்களில் மின்தடை வணிகர்களின் வியாபாரம் பாதிப்பு
வாரச்சந்தை நாட்களில் மின்தடை வணிகர்களின் வியாபாரம் பாதிப்பு
ADDED : டிச 20, 2024 02:34 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் வாரச்சந்தை நாட்களின் போது மாதாந்திர மின்தடை ஏற்படுவதால் வணிகர்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்தனர்.
கமுதி துணை மின்நிலையத்தில் இருந்து முதுகுளத்துார், அபிராமம், கமுதி உட்பட பல்வேறு கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
நேற்று வியாழக்கிழமை முதுகுளத்துார் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்பட்டது. முதுகுளத்துாரில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடக்கிறது.
சுற்றுவட்டார 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோர் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். வியாபாரி மூவேந்திரன் கூறியதாவது:
வாரச்சந்தை நாட்களின் போது மின்தடை ஏற்படுவதால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
இனி வரும் நாட்களில் பராமரிப்பு பணிகள் வாரச்சந்தை நாட்களில் நடைபெறாமல் இருக்க மின் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.