/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரதமர் பயிர் இன்சூரன்ஸ் திட்டம் நவ.15 வரை நெல்லுக்கு காப்பீடு
/
பிரதமர் பயிர் இன்சூரன்ஸ் திட்டம் நவ.15 வரை நெல்லுக்கு காப்பீடு
பிரதமர் பயிர் இன்சூரன்ஸ் திட்டம் நவ.15 வரை நெல்லுக்கு காப்பீடு
பிரதமர் பயிர் இன்சூரன்ஸ் திட்டம் நவ.15 வரை நெல்லுக்கு காப்பீடு
ADDED : அக் 17, 2024 05:17 AM
ஆர்.எஸ்.மங்கலம்: சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு பிரதமர் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் நவ.15 வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என வேளாண் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
நெல், கோதுமை, சோளம், கரும்பு, வாழை, வெங்காயம், உளுந்து, மிளகாய் உள்ளிட்டவை வறட்சி மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிப்பிற்குள்ளாகும் போது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்து இழப்பீடு வழங்கும் வகையில் 2016 ல் பிரதான் மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து எட்டாவது ஆண்டாக செயல்படுத்தப்பட்டு வரும் இத் திட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நடப்பு ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நவ.15 வரை பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு விவசாயிகள் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., வழங்கும் சாகுபடி அடங்கலை பெற்று உரிய ஆவணங்களுடன் பிரிமியத்தொகை செலுத்தி பதிவு செய்யலாம். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நெற்பயிருக்கு எக்டேருக்கு ரூ.869.85ம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் ரூ.1115.94ம் பிரிமியமாக செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு இத்திட்டத்தில் பயிர் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துவதற்கு நவ.15 கடைசி நாள் என்பதால் விவசாயிகள் காலதாமதம் இன்றி இத்திட்டத்தில் பயனடையுமாறு வேளாண் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.