ADDED : ஆக 07, 2025 08:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
சிவசாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.