ADDED : ஆக 20, 2025 11:32 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் உள்ள சிவன்கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
பிரதோஷத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மாலையில் மூலவர், நந்திக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ரிஷப வாகனத்தில் அம்மன் உடன் சுவாமி உட்பிரகாரத்தை வலம் வந்தார்.
இதுபோன்று நீலகண்டி ஊருணி அருகேயுள்ள ராமநாதபுரம் நீலகண்டி ஊருணி அருகேயுள்ள காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோயில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயில் உள்ளிட்ட இடங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது, பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவசாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பரமக்குடி: எமனேஸ்வரம், நயினார்கோவில் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி கோயிலில் பிரதோஷ நந்திக்கு மாலை நேரத்தில் அபிஷேகம் நடந்தது.
பின்னர் நந்தி வாகனத்தில் சுவாமி பிரகாரத்தில் வலம் வந்தார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் எமனேஸ்வரமுடையவர் கோயில், நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி நாகநாதசுவாமி கோயில் பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.