/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிவன்கோயில்களில் பிரதோஷ வழிபாடு
/
சிவன்கோயில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED : பிப் 21, 2024 11:04 PM

ராமநாதபுரம் : பிரதோஷத்தை முன்னிட்டு ராமநாதபுரம் சிவன் கோயில்களில் ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு, நந்திக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
ராமநாதபுரம் மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயிலில் மாலை 4:30 மணிக்கு நந்தி, மூலவருக்கு சிறப்பு அபிேஷக அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மனுடன் உட்பிரகாரத்தை வலம் வந்தார்.
இதே போல வெளிபட்டணம் சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், குமரய்யா கோவில் ரோட்டில் உள்ள சிவஞானேஸ்வரர் கோயில், ஆர்.எஸ்.மடை ராஜேஸ்வரன் கோயில், கலெக்டர் அலுவலக வளாகம் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகேயுள்ள மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயில், வினை தீர்க்கும் வேலவர் கோயில் ஆகிய இடங்களில் பிரதோஷ வேளையில் நந்தீஸ்வரர், லிங்கத்திற்கு அபிேஷக பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.----