/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எமனேஸ்வரம் சிவன் கோயில் பிரதோஷம்
/
எமனேஸ்வரம் சிவன் கோயில் பிரதோஷம்
ADDED : ஜூன் 23, 2025 11:34 PM

பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம், நயினார்கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ விழா நடந்தது.
எமன் ஈஸ்வரனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற எமனேஸ்வரமுடையவர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது.
இங்கு சொர்ணகுஜாம்பிகை, எமனேஸ்வரமுடையவர் அருள் பாலிக்கின்றனர். வில்வம் தலவிருட்சமாக உள்ள நிலையில் எமனுக்கு ஈஸ்வரன் கொடுத்த சாபம் நீங்கப் பெற்று மீண்டும் எமன் தனது எமன் பதவி பெற்றதாக தல புராணம் கூறுகிறது.
இங்கு நேற்று மாலை 4:00 மணிக்கு பிரதோஷ நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பின்னர் கோயில் உள்பிரகாரத்தில் நந்தி வாகனத்தில் சுவாமி, அம்பாள் உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதேபோல் பரமக்குடி ஈஸ்வரன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நயினார்கோவில் நாகநாத சுவாமி, பெருங்கரை அட்டாள சொக்கநாதர் என அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு ஹர ஹர சிவ கோஷம் முழங்க நடந்தது.
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத் தேர்வளை ஆண்டு கொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
சிவசாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு அபிேஷகங்கள் நடந்தன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.