/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆமைகளை மீட்டு கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு
/
ஆமைகளை மீட்டு கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 26, 2025 07:12 AM
தொண்டி: தொண்டி கடலில் அரியவகை ஆமைகளை மீட்டு கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
ஆமைகள் இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரை பகுதிக்கு வருகிறது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆமையை பிடிக்க கூடாது என்பதால் வலையில் சிக்கிய ஆமைகளை உயிருடன் மீட்டு மீனவர்கள் கடலில் விட்டு வருகின்றனர். இதற்கான விழிப்புணர்வு கூட்டம் தொண்டியில் நடந்தது.
மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், கடல் அமலாக்கபிரிவு எஸ்.ஐ. குருநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆமைகளை மீட்டு கடலில் விட்ட தொண்டி, புதுக்குடி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கபட்டது.