/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழே கிடந்த பணத்தை ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டு
/
கீழே கிடந்த பணத்தை ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டு
கீழே கிடந்த பணத்தை ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டு
கீழே கிடந்த பணத்தை ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டு
ADDED : அக் 25, 2025 04:01 AM

சாயல்குடி: சாயல்குடி - கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் மதிய நேரத்தில் கவரில் பணத்தை ஒருவர் தவற விட்டுள்ளார். இந்நிலையில் துாய்மை பணியில் ஈடுபட்ட சாயல்குடி பேரூராட்சி பணியாளர் மாரிமுத்து 35, என்பவர் கவரில் இருந்த ரூ.4000 பணம் மற்றும் நகை திருப்பக் கூடிய ஆவணம் ஆகியவற்றை பத்திரமாக வைத்திருந்து, தொலைத்தவர் குறித்து தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் நேற்று பணத்தை தொலைத்த வி.வி.ஆர். நகரை சேர்ந்த முத்துலட்சுமி என தெரிய வந்தது.
இந்நிலையில் பணத்தை அவரிடம் துாய்மை பணியாளர் மாரிமுத்து ஒப்படைத்தார். இவரது நேர்மையை பேரூராட்சி தலைவர் மாரியப்பன், அலுவலர்கள் பாராட்டினார்.