/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வலையில் சிக்கிய ஆமைகளை மீட்டு கடலில் விட்ட மீனவருக்கு பாராட்டு
/
வலையில் சிக்கிய ஆமைகளை மீட்டு கடலில் விட்ட மீனவருக்கு பாராட்டு
வலையில் சிக்கிய ஆமைகளை மீட்டு கடலில் விட்ட மீனவருக்கு பாராட்டு
வலையில் சிக்கிய ஆமைகளை மீட்டு கடலில் விட்ட மீனவருக்கு பாராட்டு
ADDED : டிச 19, 2025 05:20 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மீன் பிடிக்கும் போது வலையில் சிக்கிய ஆமைகளை மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆமைகளை மீட்ட மீனவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாவட்ட வன உயிரின காப்பாளர் அகில்தம்பி முன்னிலை வகித்தார். வலையில் சிக்கிய ஆமைகளை பத்திரமாக கடலுக்குள் விட்ட 12 மீனவர்களுக்கு 'கடல் காப்பான்' விருது மற்றும் தலா ரூ.1000 பரிசு வழங்கப்பட்டது.
மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.