ADDED : ஆக 02, 2025 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே மரக்குளம் கருமேனியம்மன் கோயில் பின்புறம் ஜூலை 14ல் இளைஞர் நல்லுக்குமாரை சிலர் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கமுதி எஸ்.ஐ., கவுதம் தலைமையிலான போலீசார் விரைந்து கண்டுபிடித்தனர்.
எஸ்.ஐ.,கவுதம், போலீசார் வேதமாணிக்கம், எத்திராஜ், குமாரசாமி, திருமுருகன் ஆகியோரை எஸ்.பி.,சந்தீஷ் நேரில் வரவழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.