
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி சந்தோஷிகா ஸ்ரீ. அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 15 கி.மீ., கடந்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். மாணவிக்கு ரூ.5000 பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
பள்ளி தாளாளர் கோகிலா, நிர்வாக ஆலோசகர் ஜேக்கப், முதல்வர் பிரீத்தா, துணை முதல்வர் முத்துக்கண்ணு, விளையாட்டு ஆசிரியர் அருள்மாரி உள்ளிட்டோர் மாணவியை பாராட்டினர்.