UPDATED : அக் 11, 2026 06:21 PM
ADDED : அக் 11, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை: ராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி அழகுசுந்தரி 19 வயதிற்குட்பட்ட பிரிவில் 110 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், மாணவி சவுந்தர்யா 3000 மீ., ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். சேலத்தில் நடக்கவுள்ள மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் உசேன், உடற்கல்வி இயக்குநர் அன்சாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் மணிமாறன், தமிழரசு, ரஹீமா மற்றும் அபிராமம் கல்வி பொறுப்புக் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
