/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழே கிடந்த நகையை ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு
/
கீழே கிடந்த நகையை ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு
ADDED : ஜூலை 18, 2025 11:49 PM

முதுகுளத்துா: -கமுதி பஸ் ஸ்டாண்ட் அருகே ரோட்டில் கிடந்த தங்க செயினை போலீசில் ஒப்படைத்த கடலாடி கருங்குளம் தொழிலாளி முருகனை போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.
கமுதி அருகே ஆத்திப்பட்டியை சேர்ந்த முருகன் மனைவி மாலதி 42, கமுதியில் கடந்த ஜூலை 14ல் 12 கிராம் தங்க செயினை தொலைத்துள்ளார். இதுகுறித்து பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. கடலாடி கருங்குளத்தைச் சேர்ந்த தனியார்  சேல்ஸ் தொழிலாளி முருகன் 47, கமுதியில் கீழே கிடந்து நகையை எடுத்துள்ளார். இதுகுறித்து முதுகுளத்துார் போலீசில் தகவல் அளித்துள்ளார்.   முதுகுளத்துார் டி.எஸ்.பி., சண்முகம் முன்னிலையில் முருகன் நகையை தொலைத்தவர்களிடம் நேரடியாக வழங்கினார். பின்பு நகையை எடுத்துக் கொடுத்த முருகன், உறுதுணையாக இருந்த மலைசெல்வம் ஆகியோரை டி.எஸ்.பி., சண்முகம், வணிகர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

