/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
4000 நாட்கள் சிறையில் வாழ்ந்த தியாகி தேவர் கருணாஸ் புகழாரம்
/
4000 நாட்கள் சிறையில் வாழ்ந்த தியாகி தேவர் கருணாஸ் புகழாரம்
4000 நாட்கள் சிறையில் வாழ்ந்த தியாகி தேவர் கருணாஸ் புகழாரம்
4000 நாட்கள் சிறையில் வாழ்ந்த தியாகி தேவர் கருணாஸ் புகழாரம்
ADDED : அக் 31, 2024 01:09 AM
கமுதி: தன் வாழ்நாளில் 4000 நாட்கள் தேசத்தின் விடுதலைக்காகவும், மக்களின் விடுதலைக்காகவும் சிறையில் இருந்த தியாகி முத்துராமலிங்கத்தேவர் என்று முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர் கருணாஸ் கூறினார். அவர் கூறியதாவது:
இந்திய சுதந்திர போராட்ட தியாகியும், ஒட்டுமொத்தமாக இந்த தேசத்தில் மதவாதத்திற்கும் சாதிய வாதத்திற்கும் எதிராக தன் வாழ்நாள் முழுவதும் போராடி வாழ்நாளில் 4000 நாட்கள் தேசத்தின் விடுதலைக்காகவும், மக்களின் விடுதலைக்காகவும் சிறைச்சாலையில் கழித்த ஒப்பற்ற தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்.
அவரது குருபூஜை விழாவும், பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. பல ஆண்டுகளாக அன்னதானம் வழங்கி வருகிறேன். இதையடுத்து நிரந்தரமாக மண்டபம் கட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் முன்னிலையில் பூமி பூஜை செய்யப்பட்டது.
இந்த மண்டபத்தில் ஏழை மக்கள் அனைத்து தரப்பினரும் இலவசமாக திருமணம் உள்ளிட்ட நல்ல காரியங்கள் நடத்திக் கொள்ளலாம். தேசத்திற்காக உழைத்த தியாகிகளை எந்த ஒரு வட்டத்திற்குள் யார் ஒருவரும் கொண்டு வருவது தவறான செயல் என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். அவரை வணங்கினால் கடவுள், ஏற்றுக் கொண்டால் தலைவர் அவர் எல்லோருக்கும் மான தலைவர் என்றார்.

