பரமக்குடி ஐயப்பன் கோயிலில் அத்தப்பூ கோலமிட்டு வழிபாடு
பரமக்குடி ஐயப்பன் கோயிலில் அத்தப்பூ கோலமிட்டு வழிபாடு
ADDED : ஆக 26, 2026 07:10 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை விழாவையொட்டி அத்தப்பூ கோலமிட்டு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
பரமக்குடி தரைப்பாலம் அருகில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு கேரளா ஆரியங்காவு கோயிலில் நடக்கும் புஷ்கலா தேவி திருக்கல்யாண வைபவம் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. கடந்த மாதம் நிறை புத்தரிசி விழாவையொட்டி கதிர் பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ண கோலமிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
பின்னர் விளக்கேற்றி ஐயப்பனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதன்படி மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக கேரளாவில் ஒவ்வொரு வீடு மற்றும் கோயில்களிடம் ஓணம் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
–––
