sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 தேர்வு பணியில் இருந்து விலக்களிக்க கர்ப்பிணி ஆசிரியைகள் கோரிக்கை

/

 தேர்வு பணியில் இருந்து விலக்களிக்க கர்ப்பிணி ஆசிரியைகள் கோரிக்கை

 தேர்வு பணியில் இருந்து விலக்களிக்க கர்ப்பிணி ஆசிரியைகள் கோரிக்கை

 தேர்வு பணியில் இருந்து விலக்களிக்க கர்ப்பிணி ஆசிரியைகள் கோரிக்கை


ADDED : பிப் 26, 2026 07:52 AM

Google News

ADDED : பிப் 26, 2026 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: அரசு பொதுத்தேர்வு பணிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் போது கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர் மருத்துவம் செய்து வருவோர் போன்ற ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் முருகேசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்ச் 11 முதல் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 க்கு மேற்பட்ட தேர்வு மையங்களில் நடக்கிறது. தேர்வுப்பணிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் போது கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும். பஸ் வசதி இல்லாத தேர்வு மையங்களுக்கு பெண் ஆசிரியர்களை நியமனம் செய்யக் கூடாது.

ராமநாதபுரம், பரமக்குடி நகரிலுள்ள சில தனியார் பள்ளிகளிலுள்ள தேர்வு மையங்களில் சிலர் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி பணி நியமன ஆணை பெறுவது தொடர் கதையாக உள்ளது. அதை தவிர்த்து பெண் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தேர்வு பணி ஆசிரியர்கள் நியமனம் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்திட முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us