ADDED : ஜூலை 23, 2025 10:18 PM
திருப்புல்லாணி; அமாவாசையில் முன்னோர்களின் ஆசிகளை பெற்று பலவிதமான துன்பங்கள், தோஷங்கள், சாபங்களில் இருந்து விடுபடுவதற்கான முக்கிய நாளாகும். குறிப்பாக ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை கடற் கரையில் செய்கின்றனர்.
தட்சணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு. ராமநாத புரத்தில் இருந்து 15 கி.மீ.,ல் உள்ள சேதுக் கரையில் சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.
இக்கோயிலின் வளாக பகுதிகளில் கடற்கரை உள்ளதால் ஆடி அமா வாசையில் ஏராளமான பக்தர்கள் முன்னோர் களுக்கு பித்ரு பூஜைகள் செய்து புனித நீராடி திரும்புகின்றனர்.
சேதுக்கரை ஊராட்சி நிர்வாகத்துடன் ஒன் றிணைந்து போலீசார், தீயணைப்பு துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற் பாடுகளை செய்து தயார் நிலையில் வைத்து உள்ளனர்.
அதிகாலை 3:30 மணி முதல் நீராட உள்ளதால் மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.