/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கட்டுமான பொருட்கள் விலை உயர்வு : வீடு கட்டுவோர் தவிப்பு
/
கட்டுமான பொருட்கள் விலை உயர்வு : வீடு கட்டுவோர் தவிப்பு
கட்டுமான பொருட்கள் விலை உயர்வு : வீடு கட்டுவோர் தவிப்பு
கட்டுமான பொருட்கள் விலை உயர்வு : வீடு கட்டுவோர் தவிப்பு
ADDED : ஜூலை 17, 2025 11:10 PM
திருவாடானை: திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், நம்புதாளை, மங்களக்குடியில் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு கூலி தொழிலாளர்கள் பல ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
சில மாதங்களாக கட்டுமான பொருட்களின் விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமான தொழில்கள் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் கூறுகையில், கட்டுமான பொருள் விலை உயர்வால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு முக்கிய கவனம் செலுத்தி கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.