மல்லிகை வரத்து குறைவால் விலை உயர்வு: கிலோ ரூ.2000
மல்லிகை வரத்து குறைவால் விலை உயர்வு: கிலோ ரூ.2000
ADDED : செப் 13, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மண்டபம், தங்கச்சி மடம் பகுதியிலிருந்து மல்லிகை வரத்து குறைந்துள்ளதாலும், சுபமுகூர்த்த தினம், விநாயகர் சதுர்த்தி விழா காரணமாக விலை அதிகரித்து கிலோ ரூ.2000 வரை விற்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மண்டபம், தங்கச்சி மடம் பகுதியில் மல்லிகைப்பூ வரத்து குறைந்துள்ளது. மேலும் சுபமூகூர்த்த தினங்கள், விநாயகர் சதுர்த்தி விழா போன்ற காரணங்களால் வெளியூர்களில் இருந்தும் மல்லிகை வரத்து குறைந்துள்ளதால், கடந்த வாரம் கிலோ ரூ.1000க்கு விற்ற மல்லிகை, தற்போது விலை அதிகரித்து கிலோ ரூ.1800 முதல் ரூ.2000 வரை விற்கிறது என வியாபாரிகள் கூறினர்.––
