/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீன்பிடி தடையால் 20 நாட்களாக ராமேஸ்வரம் கடலோரம் வெறிச்; மீன்கள் விலை உயர்வு

ADDED : மே 06, 2025 07:32 AM

ராமேஸ்வரம் : மீன்பிடிக்க தடை காலம் துவங்கிய கடந்த 20 நாள்களாக ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் நாட்டுப்படகில் சிக்கும் மீன்கள் விலை உயர்ந்தது.
மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஏப்., 15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை விதித்தது. இதனால் தமிழகத்தில் 8000 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு மீனவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இத்தடை துவங்கிய 20 நாள்களாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் கடலோர பகுதியில் டீக்கடைகள், லேத், பட்டறைகள் மூடப்பட்டு, மீனவர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இத்தடையால் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி நாட்டுப்படகு மற்றும் கரை வலையில் சிக்கும் மீன்களுக்கு கிராக்கி அதிகரித்து விலையும் உயர்ந்தது. இதனால் நேற்று ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டில் கிலோ நகரை மீன், கணவாய் மீன் ரூ. 400ம் (பழைய விலை ரூ. 300), வாளை மீன், குமுலா மீன் கிலோ ரூ. 300 (பழைய விலை ரூ. 200) விற்கப்பட்டது. இந்த விலை உயர்வால் மீன் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.