/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க கோரி பூஜாரிகள் பேரவை ஆர்ப்பாட்டம்
/
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க கோரி பூஜாரிகள் பேரவை ஆர்ப்பாட்டம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க கோரி பூஜாரிகள் பேரவை ஆர்ப்பாட்டம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க கோரி பூஜாரிகள் பேரவை ஆர்ப்பாட்டம்
ADDED : மே 18, 2025 12:14 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஹிந்து கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் கோயில்களுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஹிந்து கோயில் பூஜாரிகள் பேரவை மாநில துணைத்தலைவர் கோதாவரி பூஜாரி தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர் சலேந்திரன், மாநில துணைத்தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தலைவர் முனியசாமி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் அரியமுத்து பூஜாரி, கோட்ட மகளிர் அணித்தலைவி ரமணி அம்மாள், மடாதிபதி அகோர சிவம் சுவாமிகள் கணேசன், ஆன்மிக சேவகி ஆனந்தி அம்மாள், துறவிகள் மாநில அமைப்பாளர் பாலையா சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் நிபந்தனையின்றி பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.4000த்தில் இருந்து ரூ.5000மாக உயர்த்தி வழங்க வேண்டும். நல வாரிய சலுகைகள் பூஜாரிகளுக்கு கிடைக்க வேண்டும்.
கோயில்களுக்கு இலவச மின்சாரம் அரசு வழங்க வேண்டும். மார்கழி மாதம் பூஜைக்கு இலவசமாக அரிசி, பருப்பு, பூஜை சாமான்கள் பூஜாரிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.