/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்வு நடத்த மட்டும் உத்தரவு நிதி ஒதுக்கீடு யார் செய்வார்கள்; தலைமையாசிரியர்கள் புலம்பல்

ADDED : டிச 08, 2024 06:27 AM
ராமநாதபுரம் : பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் விளைவு -திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகளை நடத்துவதற்கு உத்தரவிடும் நிலையில் அதற்கான வினாத்தாள்களை அச்சிடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் கற்றல் விளைவு -திறன் வழி மதிப்பீட்டு தேர்வு 3, 6, 7, 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டும்.
இந்த தேர்வில் அனைத்து மாணவர்களுக்கும் வினாத்தாள் தனித்தனியாக அச்சிட்டு வழங்கப்பட வேண்டும்.
விடைகளையும் வினாத்தாள்களில் எழுதும் வகையில் இருக்க வேண்டும். இதனை வகுப்பாசிரியர்களே மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அரசுப்பள்ளிகளில் வினாத்தாள்கள் அச்சிட்டு வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.
தேர்வு நடத்த அறிவுறுத்தும் பள்ளிக்கல்வித்துறை அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் செய்ய வேண்டாமா என தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.